நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு!

33

கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 7 மணியளவில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோபால் ஒரு மணிநேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பில் ஆளுநர் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக கோபால் மீது ஆளுநரின் தனிச்செயலாளர் அளித்த முறைப்பாட்டின் பேரில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபாலைத் தொடர்ந்து நக்கீரன் இணையத்தள ஆசிரியர் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் நக்கீரனின் முதன்மை ஆசிரியர் தாமோதரன் பிரகாஷ், பொறுப்பாசிரியர் லெனின், தலைமைச் செய்தியாளர் இளையச்செல்வத்தையும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

SHARE