தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை – கறுப்பு வானை தேடி நடவடிக்கை

29

தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்ட  சவுதிஅரேபிய பத்திரிகையாளரின் உடலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கறுப்புநிற வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை துருக்கி அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்

சவுதிஅரேபிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதுரகத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளதுடன் பத்திரிகையாளரின் உடலை கொண்டுசெல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு நிற வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்

பத்திரிகையாளரை கொலை செய்வதற்கு சவுதி அரேபியாவை சேர்ந்த கொலைகுழுவொன்று ஆறு வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

இந்த வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக முக்கிய வீதிகளில் உள்ள கமராக்களை  அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் சவுதி அரேபிய தூதரகத்தில் நுழைந்து இரண்டு மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட வாகனத்தொடரணி தூதகரத்திற்குள்ளிலிருந்து வெளியேறியுள்ளது என தெரிவித்துள்ள துருக்கி அதிகாரிகள் இராஜதந்திர இலக்க தகடு பொறிக்கப்பட்ட வாகனங்களிற்குள் பெட்டிகள் ஏற்றப்படுவது கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆறு கார்களும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றன என தெரிவித்துள்ள துருக்கி அதிகாரிகள் கறுப்பு நிற வான் ஒன்று குறித்தே தாங்கள் முக்கிய கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்

சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால்கசோகி என்ற பத்திரிகையாளரே தூதரகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என  துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்டது குறிப்பிட்ட பத்திரிகையாளர் தூதரகத்திற்கு செல்லவுள்ளார் என்பதை அறிந்த சவுதிஅரேபிய அதிகாரிகள் துருக்கிவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்திரிகையாளர் நான்குநாட்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ள நிலையிலேயே துருக்கி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் மேலதிக ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

துருக்கி அதிகாரிகள் வீடியோக்களை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

சவுதி அரேபியாவிலிருந்து வந்த 15 பேர் கொண்ட குழுவினர் பத்திரிகையாளரை தூதுரகத்திற்குள் பத்திரிகையாளரை சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் உடலை வாகனமொன்றில்  ஏற்றி வெளியே கொண்டு சென்ற பின்னர் மீண்டும் தமது நாட்டிற்கு சென்றுவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE