தலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் சாதாரணமாக இருந்த நபரைப் பார்த்து பொலிசார் ஆச்சரியமடைந்தனர்.

37

தலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் சாதாரணமாக இருந்த நபரைப் பார்த்து பொலிசார் ஆச்சரியமடைந்தனர்.

ரஷ்யாவின் Donetsk பகுதியில் Yury Zhokhov என்ற நபரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த பொலிசார் அவரிடம் எப்படி இவ்வாறு ஆனது எனக் கேட்ட போது எனக்கு மூக்கில் மூச்சு விட சிரமமாக இருந்தது. அதன் காரணமாக தலையை கத்தியை வைத்து துளைத்தேன்.

ஆனால் தலையிலும் சுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் தலையில் கத்தி நிற்கிறது என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அசைய வேண்டாம் எனக்கூறி அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டனர், பின் கத்தி பாதுகப்பாக நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் செப்டிக் ஆகுவதற்கு வாய்ப்பிருப்பதால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலே கண்காணிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

காணொளியை காண இங்கே அழுத்தவும்

மேலும் குறித்த நபர் உள்ளூரில் ஒரு டெக்னிசியனாக வேலை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE