இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் குறித்து ஐசிசி விளக்கம்

17

இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் ஐசிசியின் ஆட்டநடுவராகவும்  பணியாற்றுவது குறித்து எந்த சிக்கலும் இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது

கிரஹாம் லபரோய் ஐசிசியின் ஆட்ட நடுவராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுவது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐசிசி இதனை  தெரிவித்துள்ளது.

லபரோயின் இரட்டை பணி குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம் அதன் காரணமாக முரண்பாடுகள் எதுவும் உருவாகவில்லை என ஐசிசியின் நடுவர்கள் மத்தியஸ்தர்களிற்கான சிரேஸ்ட முகாமையாளர் அட்ரின் கிரிவித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தி  ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நாங்கள் அவரிற்கு தெரிவுக்குழுவின்  தலைவர் பதவியை வழங்கியவுடன் தான் ஐசிசி நடுவராக பணியாற்றுவது குறித்து அவர் எங்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டார்  என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நாங்கள் இதனால் பிரச்சினை எதுவும் இருப்பதாக கருதவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியினர் விளையாடும் போட்டிகளில் அவர் நடுவராக பணியாற்றுவது குறித்து மாத்திரம் நாங்கள் கரிசனை கொண்டிருந்தோம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

 

SHARE