‘தங்க பால்’ என்று அழைக்கப்படும் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதனால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
மஞ்சள் என்பது ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், எத்தகைய உடல் சார்ந்த நோய்களையும் இது குணப்படுத்தும். எனவே இதனை பாலில் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கப் பால்
- ஒரு தேக்கரண்டி மஞ்சள்
- சிறிய துண்டு இஞ்சி
- அரை தேக்கரண்டி இலவங்க பொடி
- ஒரு தேக்கரண்டி தேன்
தயாரிக்கும் முறை
பாலை 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனுள் மஞ்சள், இலவங்க பொடி, இஞ்சி சேர்த்து சிறிது மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும். அதன் பின்னர், இதனை வடிகட்டி குடித்து வரலாம். தேவை என்றால் தேனை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
தங்க பாலினால் கிடைக்கும் நன்மைகள்
அதிக ஞாபக சக்தி
மஞ்சளில் உள்ள Curcumin என்ற மூலப்பொருள், பாலுடன் கலக்கும்போது சிறந்த விளைவுகளை தரும். இந்த பாலை குடிப்பதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும், மூளை செல்களை புத்துணர்வூட்டி, சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
இதய நோய்கள்
மஞ்சள் கலந்த பாலை குடித்து வருவதன் மூலம், இதயம் சம்பந்தமான நோய்கள் விரட்டப்படும். இந்த பாலில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்து, இதயத்தை பாதுகாக்கும்.
கெட்ட கொலஸ்ட்ரால்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க மஞ்சள் கலந்த பால் உதவும். எனவே, தினமும் இந்த தங்க பாலை குடித்து வந்தால் உடல் எடை சட்டென்று குறைந்து விடும்.
புற்றுநோய்
புற்றுநோய் செல்களை அழிக்கவும், அவற்றை உருவாகாமல் தடுக்கவும் தங்க பால் பெரிதும் உதவும். மஞ்சள் அடிப்படையில் ஒரு கிருமி நாசினி என்பதால், புற்றுநோய் செல்கள் எதிர்த்து போராடும். அத்துடன் தங்க பாலானது உடலில் ஏற்கனவே உள்ள கிருமிகளையும் கொல்லும் ஆற்றல் கொண்டது.
சர்க்கரை நோய்
உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள தங்க பால் பயன்படும். அத்துடன் ரத்தத்தின் ஓட்டத்தையும், அளவையும் சீராக வைத்துக் கொள்ள இந்த பால் உதவும்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் பாலில் மஞ்சள், இலவங்கபொடி, இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வருவது நல்ல பலனை தரும்.
எதிர்ப்பு சக்தி
தங்க பால் குடிப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்காகும். அத்துடன் உடலில் செல்களை சிதையாமலும் பார்த்துக்கொள்ளும். இதனால் நோய்கள் எளிதில் வராது.
மூட்டு பிரச்சனை
மூட்டுப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தங்க பால் அருமருந்தாகும். இது எலும்புகள், மூட்டுகளுக்கு வலிமையை அதிகரிக்கும். அத்துடன் மூட்டு கோளாறுகளையும் குணப்படுத்தும். மேலும், மூட்டில் ஏதேனும் வீக்கம் அல்லது காயங்கள் இருந்தால் அவற்றையும் சரி செய்துவிடும்.
ஜீரண பிரச்சனை
தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதாலும், அளவுக்கு அதிகமாக உணவுகளை உட்கொள்வதாலும் செரிமான கோளாறுகள் ஏற்படும். இவற்றை சரிசெய்ய தங்க பாலை அருந்த வேண்டும். இது எல்லாவிதமான செரிமான பிரச்சனைகளையும் குணப்படுத்திவிடும்.