உணவு உண்ட பின் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.
மேலும் 100 கிராம் அத்திப்பழத்தில் 107 கலோரிகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பு சத்து (0.1கிராம்) உள்ளது. இதில் கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், விட்டமின் B-12 ஆகியவை அதிக அளவில் கிடைகின்றன.
தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
- உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
- தினமும் 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
- மலச்சிக்கலை போக்க உணவு உண்ட பின் சிறிதளவு அத்திபழங்களை சாப்பிட்டால் விரைவில் மலச்சிக்கல் தீரும்.
- கல்லீரல் வீக்கத்தை போக்க ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து, அதன் பின் தினமும் இரண்டு சாப்பிட்டு வர வீக்கம் விரைவில் குணமடையும்.
- தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக மற்றும் முழு அளவு ஊட்டச்சத்தையும் பெற முடியும்.
- இரண்டு பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது, இதனால் எலும்புகள் பலம் பெறுகின்றன.
- அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.
- போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
- அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
- தினமும் இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது.