இயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுக்க செய்ய வேண்டியவை

35

30 வயதை தாண்டினாலே பெண்கள் தங்கள் அழகு குறித்து கவலைப்படுவதுண்டு. ஏனெனில் 30 வயது ஆகிவிட்டாலே பெண்களுக்கு முகச் சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.

இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு போய் அழகுபடுத்துவதை விட வீட்டிலே நாம் எளிய வழிகளைக் கையாளுவோம்.

முகசுருக்கம் வரமால் இருக்க கடைபிடிக்க வேண்டியவை
 • தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.
 • நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 • வெள்ளரிக்காய், பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களால் செய்யப்பட்ட அழகு கிரீம்கள் நல்ல பலனைத் தரும்.
 • தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் சாப்பிட்டால் சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கும்.
 • அடிக்கடி முகத்தை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 • குளித்தவுடன் முகத்தை அழுத்தித் தேய்க்காமல் துணியால் மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும்.
 • மனதில் கவலையைக் குறைத்துக்கொண்டாலே போதும். முகத்தில் எப்போதும் இளமையும், புத்துணர்வும் தாண்டவமாடும்.
 • கிரீம்கள் வாங்கும் போது என்னென்ன ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் நன்மை, தீமை என்ன என்பதை அறிந்துதான் கிரீமை வாங்க வேண்டும்.
முகச்சுருக்கம் நீங்க செய்ய வேண்டியவை
 • முட்டையுடன், எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்கி சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விட்டு பிறகு கழுவி விடுங்கள்.
 • பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து பசைபோல் முகத்தில் தடவிக் கொண்டு 30 நிமிடங்கள் காய வைத்து பின் கழுவவும் இவ்வாறு செய்வதால். சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும்.
 • பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும்முன் முகத்தில் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்த பின் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்துவிடும்.
 • பன்னீரில் சிறிதளவு கிளிசரின் கலந்து முகத்தில் தினமும் தொடர்ந்து தடவி வரவேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்தால் சுருக்கம் மறைந்துவிடும்.
 • இரவு படுக்கும் முன் கடுகெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சரிசமனாக கலந்து முகம், கழுத்தில் தேய்த்து காலையில் கடலை மாவு, பயத்தம் மாவு கலந்து தேய்த்துக் கழுவலாம். முகச்சுருக்கம் நீங்கி முகம் புத்துணர்வு பெற்று காணப்படும்.
 • பாதாம் பருப்பு ஒன்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மையாக அரைத்து முகம், கழுத்தில் பூசி ஊறவைத்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்வதல் தோல் சுருக்கங்கள் மறையவாய்ப்புண்டு.
 • வெள்ளரிக்காய் சாறு ஒரு தேக்கரண்டி, தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி, காரட் சாறு ஒரு தேக்கரண்டி, தயிர் ஒரு தேக்கரண்டி, கடலைமாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து குழைத்துப் பூசி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

SHARE