ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்: சொந்த மண்ணில் பலத்துடன் களமிறங்கும் இலங்கை

37

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தம்புல்லாவில் நடைபெறுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்து ஆசியக்கிண்ண தொடரில் படுதோல்வியடைந்து இலங்கை அணி வெளியேறிய நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதே சமயத்தில் சொந்த ஊரில் விளையாடுவது இலங்கை அணிக்கு பலமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து அணி தற்போது நல்ல பலத்துடன் உள்ளது.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவை 5-0 மற்றும் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE