வவுனியாவில் பொலிஸாருக்கு உதவி வந்த இரண்டரை வயது உயிருக்கு நேர்ந்த பரிதாபம்

16

>வவுனியா பொலிஸாருக்கு பக்கபலமாக இருந்து பல குற்றங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காட்டிய கூப்பர் எனும் மோப்ப நாய் உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும், மின்சாரம் தாக்கியதாலேயே இரண்டரை வயதுடைய கூப்பர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் கூப்பரை அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த மோப்பநாய் மருத்துவ பரிசோதனைக்காக கால் நடைவைத்திய அதிகாரியிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE