திடீரென நகருக்குள் புகுந்த வெள்ளம்! பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலி…. அதிர்ச்சி வீடியோ

29

ஸ்பெயின் நாட்டில் Majorca தீவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலியானதோடு, 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் நாட்டின் Majorca தீவில் கடந்த 18 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பெய்தது. இதனால் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், Sant Llorenç நகரம் முழுவதும் சேதமடைந்தது. இதில் சாலையில் பயணித்த பொதுமக்கள் பலரும் அடித்து செல்லப்பட்டனர்.

சம்பவத்தின்போது காரில் பயணம் செய்துகொண்டிருந்த பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினரும் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கினை Sant Llorenç பகுதியில் உள்ள சில நபர்கள் தங்களுடைய செல்போன்களில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சாலைகளில் சென்றுகொண்டிருந்த கார்களை அடுத்து செல்கிறது. அதேபோல வீடுகளின் ஜன்னல்கள் வரை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE