முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை மோசமாக விமர்சித்த டிரம்ப்

22

கடந்த கால ஒபாமா அரசைப் போன்று நான் கையாலாகாதவனாக இருக்க மாட்டேன் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு சீனக் கடலில் செயற்கையாக தீவு அமைக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. ஆனால் இதனை ஜப்பான், வியட்நாம், மலேசியா, புருனே, தைவான் போன்ற நாடுகள் விரும்பாத நிலையில், சீனா தனது படை பலத்தை காட்டி அச்சுறுத்தி வருகிறது.

இதனால், ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது தென் சீனக் கடலில் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி சீனாவுக்கு மிரட்டல் விடுத்தது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கிருந்து திரும்பிய அவர் ஜனாதிபதி டிரம்ப் உடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தென் சீனக் கடல் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் இதற்கு முன் அமெரிக்காவில் இருந்து ஒபாமா அரசு கையாளாகாத தனத்துடன் செயல்பட்டது. அதனால் தான் தெற்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதுபோன்று என்னுடைய அரசு இருக்காது. பிரச்சனைக்குரிய கடற்பகுதியில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது. இதில் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம்.

நாங்கள் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ சீனாவுக்குச் சென்று வந்துள்ளார். அவரிடமிருந்து சீனா எனக்கு பல செய்திகளை அனுப்பியிருந்தாலும், அதனால் எந்த பயனும் இல்லை.

பெய்ஜிங் சென்ற பாம்பியோவுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சிதான். ஆனால், அங்கு சீன அதிகாரிகளுடன் பாம்பியோ நடத்திய பேச்சு எந்த விதத்திலும் முன்னேற்றம் அளிக்கவில்லை. இதனால் சீனாவுக்கு எங்களுடைய பயணம் சிறப்பானதாக இருந்தது என கூற முடியாது’ என தெரிவித்துள்ளார்.

SHARE