பிரான்ஸ் முழுவதும் இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்! ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்பு

27

பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் CGT உள்ளிட்ட பல தொழிலாளர் அமைப்பினர், ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் உட்பட 1,60,000 பேர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சின் முக்கிய நகரங்களான பாரிஸில் 21,000 பெரும்,

ரென்னிஸ் நகரில் சுமார் 3,000 பேரும், Caen-யில் ஆயிரம் பேர் வரையிலும், Nantes நகரில் 7,000 பேர் வரையிலும் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர Angers, La mans உள்ளிட்ட பல நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எனினும், போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 3,00,000 பேர் கலந்துகொண்டதாக தொழிற்சங்கள் அறிவித்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE