ஒற்றைக் கையில் அசால்ட்டாக கேட்ச் பிடித்து அசத்திய மேக்ஸ்வெல்!

39

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் உள்ளூர் போட்டி ஒன்றில், ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஜே.எல்.டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், விக்டோரியா-வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் விக்டோரியா அணியில் விளையாடினார். இந்தப் போட்டியில், வெஸ்டர்ன் அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காதிர் பந்தை தூக்கி அடித்தார்.

அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த மேக்ஸ்வெல், சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இப்போட்டியில், மேக்ஸ்வெலின் விக்டோரியா அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. எனினும், உள்ளூர் போட்டியில் மேக்ஸ்வெல் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

SHARE