அரசியலமைப்புப் பேரவைக்கான பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்புப் பேரவைக்கு, சிவில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் இன்று (11) நியமிக்கப்படவுள்ளனர்.

அவர்களில் ஜாவிட் யூசுப், ஜயந்த தனபால மற்றும் என். செல்வகுமரன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இவர்களின் பெயர் விபரங்கள் இன்று பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்தி அரசியலமைப்புப் பேரவைக்கு நியமனம் பெறும் ஏனைய உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அதற்காக, அமைச்சர் தலதா அதுகோரல, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபஸ மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்புப் பேரவையில் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் உள்ளடங்குவதுடன், ஜனாதிபதியின் பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

About Thinappuyal News