மன்னார் மனித புதைகுழியில் கிடைத்த தடையப் பொருள் 

52
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தொடர்சியாக இடம் பெற்றுக்கொண்டு வருகின்றது. தெடர்ச்சியாக மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணா ராஜா மேற்பார்வையிலூம் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அகழ்வு பணியின் ஆரம்ப நாட்களில் சந்தேகத்திற்க்கு இடமான பொலித்தீன் பக்கெட் ஒன்று குறித்த வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவ் பொலிதீன் பாக்கெட் இணை தடையப் பொருளாக கருதி அவ் பாக்கெட் ஆனது நீதிமன்ற பாதுகாப்பில் வைப்பதற்காக வழங்கப்படாது.
குறித்த பாக்கட் ஆனது மெலிபன் நிறுவனத்துக்கு உரிய ஒரு தயாரிப்பாக காணப்பட்டமையினால் குறித்த பாக்கெட் தயாரிக்கப்பட்ட ஆண்டை கணிப்பதன் மூலம் குறித்த புதைகுழியில் காலப் பகுதியை ஒரு அளவுக்கு கணிக்க முடியும் என நம்பப்பட்டது.
அந்த வகையில்  மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருது தெரிவித்த சமிந்த ராஜபக்ஷவிடம் அவ் மெலிபன் பாக்கெட் தொடர்பாக வினவப்பட்டது. குறித்த கேள்விக்கு பதில் அளித்த சட்ட வைத்திய அதிகாரி குறித்த மெலிபன் பாக்கெட் தொடர்பான தகவல்களை நாங்கள் குறித்த நிறுவனத்திடம் கோரியுள்ள போதும் இன்று வரை குறித்த பாக்கெட் தொடர்பான துல்லியமான தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
அத்துடன் இதுவரை 175 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 169 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவில் உள்ள புளோரிடாவிற்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பதற்கான முன் மொழிவு ஒன்றை தான் தாக்கல் செய்துள்ளதாகவும் இதுவரை அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனவும் வழங்கும் பட்சத்தில் இதுவரை அப்புறப்படுத்தப்பட்ட மனித எச்சங்களை ஆய்வுக்கு அனுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்தாலும்  அகழ்வு பணிகள் இடம் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் குறித்த மெலிபன் பாக்கெட் தொடர்பான அறிக்கையை விரைவாக கோருவதன் மூலம் ஓரளவேனும் குறித்த புதைகுழியின் ஆண்டினை கணித்து விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் கருது தெரிவித்துள்ளார்.
SHARE