வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  நூல் அன்பளிப்பு  

(மன்னார் நகர் நிருபர்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தம்மால் இயன்றளவு உதவிகளை சேவையாக செய்து வரும் அமைப்பான மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தங்களின் சேவையின் அடுத்த பகுதியாக இன்று 11-10-2018 வியாழக்கிழமை புனித வளனார் றோ.க.த பாடசாலைக்கு(புனித ஜோசப் மகாவித்தியாலயம்) விஜயம் மேற்கொண்டு பாடசாலை நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்களை வழங்கி வைத்துள்ளனர்.

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மன்னார் பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவும் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் இணைந்து மேற்குறித்த பாடசாலையின் அதிபர் திரு. F.ஸ்ரான்லி டிமெல் லெம்பேர்ட் அவர்களிடம் ஒரு தொகுதி நூல்கள் வழங்கிவைத்தனர்.

பாடசாலைமாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு பாடசாலைகளில் உள்ள நூலகங்களின் பங்களிப்பு அளப்பெரியது அப்படியான நல்ல நூலகங்களை உருவாக்கி தரமான நூல்களை வழங்கி மாணவர்களின் கல்விக்கு துணையிருப்போம் என்ற நோக்குடன் குறைவான வளங்களோடும் வசதியற்றும் காணப்பட்டு குறித்த பாடசாலை நுலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News