முதல் ஆட்டத்தை குழப்பிய மழை

44

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் வெறும் 15 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து சுமார் 4 மணித்தியாலங்கள் போட்டி மழையால் தடைப்பட, இரவு எட்டு மணியளவில் மைதானம் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டது.

எனினும் மைதானத்தை ஆராய்ந்த நடுவர்கள் மைதானத்தின் சில பகுதிகளில் ஈரத்தன்மை (Wet) அதிகமாக இருப்பதால் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் இடம்பெற்று இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்து அணியை பணித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 25 ஓட்டங்களுடனும், ஒயின் மோர்கன் 14 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் இருந்தனர்.

SHARE