இந்தியன் 2 படத்தின் வில்லன் இவர்தான்!

35

2.0 முடிந்தபிறகு ஷங்கர் அடுத்து இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு எப்போதோ வந்துவிட்டது, ஆனாலும் இன்னும் ஷூட்டிங் துவங்காமல் முதற்கட்ட பணிகள் மட்டும் நடந்துவருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தான் 2.0 படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய் குமாருக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம், அதனால் ஹிந்தியிலும் இந்தியன் 2 அதிகம் வியாபாரம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

SHARE