மலிங்காவின் பந்து வீச்சை அறிய இது உதவியாக இருந்தது

33

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கூறுகையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மாலிங்கவின் பந்துவீச்சிலுள்ள நுணுக்கங்களை அறிவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து வேலை செய்தது உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் மலிங்க நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகின்றார்.

நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளிலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக எங்களது வீரர்கள் சில போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நானும் அவருடன் மும்பை அணியில் பயிற்சி வலைகளின் கீழ் விளையாடியுள்ளேன்.

இதனால், அவரது பந்துவீச்சுப்பாணி எனக்கு பரிச்சயமான ஒன்றாக மாறியிருக்கின்றது. மாலிங்கவின் பந்துவீச்சு பரிச்சயமான ஒன்றாக இருந்த போதிலும் அதில் இன்னும் சவால்கள் உள்ளன.

மாலிங்க போன்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை முறையாக எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் அனைத்தினையும் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE