காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

42

மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரைத் தேடும்பணி 4வது நாளாகத் தொடர்ந்த வேளையில் இன்று அவரது சடலம் ஆழ்கடல் பகுதியில்   மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை – புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான கணபதிப்பிள்ளை ரவிச்சந்திரன்  என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த திங்கட்கிழமை இரவு 08 ஆம் திகதி மீன்பிடிக்காக கடலுக்குச் சென்றிருந்த சமம் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து காணாமல் போயிருந்தார்.

இது குறித்து பிரதேச மீனவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து இன்று கண்டுபிடிக்கப்பட்ட குறித்த நபரின் சடலம் வாகரைப் பிரதேச வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE