பத்தரமுல்லை தீ விபத்து

54

பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில்  இன்று முற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை – பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பெல் -212 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் தீயணைப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையினரின் வாகனங்களும் குறித்த பகுதியில் சேவையிலீடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

3 மணிநேர தொடர்போராட்டத்தின் பின் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதேவைள, தீ பரவல் காரணமாக கொட்டாவ – பொரளை வரையான 174 ஆம் இலக்க பஸ் மார்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது

SHARE