சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்ட மூவர் கைது

18

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையிரன் தெரிவித்துள்ளனர்.

தலவாகலை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்குமைய நேற்றிரவு பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நீண்டகாலமாக குறித்த வனபகுதியில் சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்வுக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றிய விசேட அதிரடி படையினர் தப்பியோடி மேலும் மூவரை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE