முச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்

17

முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கான விலை உயர்வினை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கிலோமீற்றருக்காக தற்போது அறவீடு செய்யப்படும் 60 ரூபா என்ற தொகையில் மாற்றம் இருக்காது எனவும், இரண்டாம் கிலோமீற்றர் முதல் அறவீடு செய்யப்படும் தொகை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை வான் சேவைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE