மட்டக்களப்பு புறநகரில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்காக கரித்தாஸ் இலங்கை-செடெக் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று காலை உறவினர்களிடம்.

34

மட்டக்களப்பு புறநகரில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்காக கரித்தாஸ் இலங்கை-செடெக் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை-செடெக் அமைப்பு இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு நிறைவினை அனுஸ்டிக்கின்றது.

இதற்கு அமைவாக மாவட்டம் தோறும் ஒரு வறிய குடும்பம் தெரிவுசெய்யப்பட்டு சகல வசதிகளும் கொண்ட வீடு ஒன்றினை நிர்மாணித்து வழங்கி வருகின்றது.

இதன்கீழ் செடக் ஹரித்தாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் உதவியுடன் மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் 11 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜுபிலி இல்லம் உறவினர்களிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் பணிப்பாளர் அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்து உறவினர்களிடம் கையளித்தார்.

 

 

 

 

 

SHARE