ரஷ்ய ‘சோயுஸ்’ ராக்கெட்டில் கோளாறு

38

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் ‘சோயுஸ்’ ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம் தரையிறங்கினர்.

ஒட்டுமொத்த சூழ்நிலையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில், மனிதர்களை இட்டுச் செல்லும் விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ரஷ்யத் துணைப் பிரதமர் போரிசோவ் அறிவித்துள்ளார்.

கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.

இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்ட இந்த ட்வீட்.

SHARE