அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வைத்திய கலாநிதி சிவமோகன் இருவரின் வாக்குறுதிகளை நம்பி தற்காளிகமாக கைவிடப்பட்டது

39

 

அனுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வைத்திய கலாநிதி சிவமோகன் இருவரின் வாக்குறுதிகளை நம்பி தற்காளிகமாக கைவிடப்பட்டது

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒருமாத காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று சனிக்கிழமை கைவிட்டுள்ளனர்.

தமது விடுதலைக்கான நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் முன்வைத்த தமிழ் அரசியல் கைதிகள், நீராகாரத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த நடைபவனி இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தது. அங்கு சிறைச்சாலை முன்பாகக் கூடிய மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தார்.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 107 தமிழ் அரசியல் கைதிகளையும் தரம் பிரிக்காது விடுவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு விடுவிப்பதற்கு ஏதேனும் தடையாக இருக்குமாயின் குறுகிய கால புனர்வாழ்வுடன் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா எம்.பியிடம் உண்ணாவிரதக் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு கலந்துரையாடவுள்ளது எனவும், இதன்போது தீர்க்கமான முடிவு கிடைக்கும் எனவும், எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கூறினார்.

அதனையடுத்து அரசியல் கைதிகளும் தமிழ் மக்களும் விரும்பும் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் வரவு – செலவுத்திட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா எம்.பியிடம் உண்ணாவிரதக் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையை மாவை சேனாதிராஜா எம்.பி. ஏற்றுக்கொண்டார் எனவும், அதன் பின்னரே உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் கைவிட்டனர் எனவும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

தீர்வு இல்லையேல்
பாராளுமன்றில் பட்ஜெட்டை தோற்கடிக்குமாறு கோரிக்கை!
உடன்பட்டார் மாவை சேனாதிராசா!

அரசியல் கைதிகள் சொல்வது என்ன ?

Posted by Jana Janakan Jana on Sabtu, 13 Oktober 2018

Posted by Thinappuyalnews Thinappuyal Thinappuyal on Sabtu, 13 Oktober 2018

 

 

எமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.

நீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.

எனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோல வேண்டும்.

தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.

இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.

இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.

மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE