விடுதலைப் போராட்டம் தவறு ; அகிம்சை வழியில் போராட தயாராகுங்கள்: சம்மந்தன் சர்ச்சை பேச்சு

24

 

விடுதலைப் போராட்டம் தவறு ; அகிம்சை வழியில் போராட தயாராகுங்கள்: சம்மந்தன் சர்ச்சை பேச்சு

அகிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சி எப்பொழுதோ எமக்கு கிடைத்திருக்கும். ஆனால் பெரும் வன்முறை போராட்டங்கள் மூலம் நாம் தவறிழைத்து விட்டோம். இப்படி நேற்று நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரையொன்றை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றினார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்- “1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் ஒரேயொரு ஆசனத்தை தவிர்ந்த மிகுதி அனைத்து ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட்டணியாக கைப்பற்றினோம். அப்போது, அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டங்களை, தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிராக காந்திய வழியில் சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்தியிருக்கலாம்.

அப்படியான போராட்டங்களை செய்திருந்தால், குறுகிய காலத்திலேயே எமக்கான சுயாட்சியை பெற்றிருக்க முடியும். இவ்வளவு பெரிய வன்முறைக்கு முகம் கொடுத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. எமது போராட்டத்தில் நாம் தவறிழைத்து விட்டோம்.

தேசிய பிரச்சனைக்கு தீர்வை காண்பதாக அரசு உறுதியளித்தது. இதுவரை அதனை அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்தும் ஏமாற்ற முயற்சித்தால் தமிழ் மக்கள் அகிம்சைரீதியான போராட்டத்தில் குதிப்பார்கள்“ என்று தெரிவித்தார்.

SHARE