நீங்கள் எவரும் பொண்ணையர்கள் இல்லைத்தானே? பொண்ணையர்கள் இல்லையென்றால் எமக்கு முன்னே வந்து நின்று பதில் சொல்லுங்கள்?

37

 

நீங்கள் புலிகளையா மீட்க வந்தீர்கள்?

நீங்கள் எவரும் பொண்ணையர்கள் இல்லைத்தானே? பொண்ணையர்கள் இல்லையென்றால் எமக்கு முன்னே வந்து நின்று பதில் சொல்லுங்கள்? மக்களை உசுப்பேத்தி ஓடி ஒழித்த அரசியல் வாதிகள்http://www.thinappuyalnews.com/archives/174549

Posted by Thinappuyalnews Thinappuyal Thinappuyal on Sabtu, 13 Oktober 2018

நீங்கள் எவரும் பொண்ணையர்கள் இல்லைத்தானே? பொண்ணையர்கள் இல்லையென்றால் எமக்கு முன்னே வந்து நின்று பதில் சொல்லுங்கள்? பதில் சொல்ல முடியவில்லையாயின் இடத்தை விட்டு நகருங்கள்.

 

இளைஞர்களை உசுப்பேத்தி வடக்கில் அரசியல் செய்யும் கஜேந்திரன் உற்பட ஏனையோர் இரு சிங்கள இளைஞர்கள் முன் பொத்திக்கொண்டு நிற்கவா பேரணி போனார்கள்?

அரசியல்கைதிகள் விடயம் மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்று. இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கில் ஏழு தமிழர்கள் விடுதலையென அறிவிக்கப்பட்டும் சிலரின் அரசியல் காரணங்களுக்காய் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டிருப்பதுபோல் இலங்கையிலும் ஒரு குழு அரசியல்கைதிகளின் பிரச்சனையை வைத்து தாம் அரசியல் லாபமடைய நினைக்கிறது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர் போன்றோர்களுடன் கடந்தவாரம் சுமந்திரன் ஓர் பேச்சுவார்த்தையினை நடாத்தி சிலருக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும் சிலருக்கு வழக்குகளை துரிதமாக முடித்து விடுதலை செய்யவும் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கு மேலதிகமாய் ஜனாதிபதி தலைமையிலான வடக்கு கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டத்திலும் அரசியல்கைதிகள் அனைவருக்கும் பொதுவான ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விடுதலை அளிக்கப்படவேண்டும் என்று பேசப்பட்டதோடு இவ்விடயம்தொடர்பாக ஓர் இறுதி முடிவை எடுக்க ஜனாதிபதியுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்க கேட்கப்பட்டது இம்மாதம் 17 ஆம் திகதி அதற்கான திகதியும் ஒதுக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றத்திலும் இவ்விடயம் பற்றி பேசப்பட்டது. இவ்வாறு அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு சாதகமான முடிவுகளை எடுக்க முனையும் நேரத்தில் திடீரென பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஓர் அரசியல் நாடகத்தினை நடத்த ஓர் அணியினர் முயன்றிருக்கின்றனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல் கைதிகள் விடயத்தை சிங்கள தமிழ் பிரச்சனையாக மாற்றி அதனூடாக புலம்பெயர் தேசத்தில் இருக்கும் சிலர் லாபமடைய நினைக்கின்றனர். சிங்கள பிரதேசத்தினூடு ஓர் நடைபவனி மேற்கொள்ளும்போது அது எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற தெளிவினை சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறக்கூடிய மொழி அறிவுடையோரை அழைத்துச்செல்லாமல் இனங்களுக்கிடையே முரண்களை தோற்றுவிக்கும் விதமாக நிலைமையை மாற்றி அமைக்க நினைத்தமையும் சிங்கள மக்கள் மத்தியில் பிழையான புரிந்துணர்வினை ஏற்படுத்த வழியேற்படுத்தியமையும் உள்ளிருக்கும் அரசியல்கைதிகளின் விடுதலையில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி என்ற கதையாய் அரசியல் கைதிகள் கதையினையும் மாற்றிவிடுவார்கள் போன்றே இருக்கிறது. சிங்கள மக்களும் அரசியல் கைதிகள் விடயத்தில் புரிந்துணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே நடைபவனி மேற்கொண்டோம் என்று கூறுவார்கள் எனில் அம்மக்களுக்கு அவ்விடயம் தொடர்பாக எடுத்துச்சொல்ல சிங்கள மொழி தெரிந்தவர்களை அழைத்துச்சென்றும் இருக்கவேண்டும் அதனூடாக அம்மக்களும் அதில் உள்ள நியாயப்பாட்டினை உணர்ந்து அம்மாணவர்களோடு இணைந்து பயணித்திருப்பர். அதைவிட்டுவிட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாதவர்கள் எதற்காய் அங்கே போனார்கள்?

ஆணிகளை புடுங்கா விட்டாலும் பரவாயில்லை ஆணிகளை அடிக்காதீர்கள்!

SHARE