(ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் சிக்கல்

19

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக லங்கா ஐ.ஓ.சி. சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஐ.ஓ.சி.நிறுவனத்தின் விற்பனையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த இந்திக லியனகே கூறுகையில்,

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிபெட்கோ நிறுவனத்தின் எரிபொருள் விற்பனை விலையிலும் ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விற்பனை விலையிலும் தற்போதைய நடைமுறையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

குறிப்பாக லங்கா ஐ.ஓ.சியின் விலை கூடுதலாக உள்ளது. இதனால் லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருள் விற்பனையானது தினம் குறைந்து வருகிறது. அரசு அறிமுகம் செய்துள்ள விலைச் சூத்திரம் இரு நிறுவனங்களுக்கும் ஒரே விதமாக தொழிற்படும் விதத்தில் அமைந்திருக்குமாயின் பிரச்சினை பெருமளவு குறைந்து விடும்.

இந்திய நிறுவனம் அவர்களுக்கு தேவையான விதத்தில் விலை ஏற்றம் செய்வதாகவும் சிபெட்கோ நிறுவனத்தின் விலையை விடவும் லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை ஒரு வீட்டருக்கு 6 ரூபாவால் அதிகமாக இருக்கின்றது.

ஆகவே அரசு ஒரே விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE