தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.

42

பிரச்சனைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. மேலும் தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் எத்தனையோ வழிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எனவே முடி அதிகம் உதிர்வது போல் தோன்றினால் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை செய்ய வேண்டும்.

அந்த வகையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய் – 1
செய்முறை
  • முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்பு மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை வார ஒருமுறை செய்து வந்தால் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.
பலன்கள்
  • தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடி உதிர்வது நிற்கப்படும்.
  • நன்கு அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. மேலும் முடி கருப்பாகவும் மிகவும் பளபளப்பாக இருக்கும்.
  • நெல்லிக்காயை காயவைத்து அதனை தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி நன்கு ஆறவைத்து தினமும் தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.
  • எலுமிச்சையை தயிருடன் கலந்து தலையில் தடவி 30 நிமிடத்திற்கு விட்டுவிட வேண்டும். பின்னர் ஷாம்பு தேய்த்து தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்கி தலை முடி உதிர்வது ஏற்படாது.

SHARE