தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் – மூவர் சிக்கினர்

18

ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பெண்ணின் மகன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த மூன்று பேரையும் கைதுசெய்துள்ள பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது என்று பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE