தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு

33
-மன்னார் நகர் நிருபர்-
 
சிறுவர் தினத்தையொட்டி மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை(13) மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும், பரிசலிப்பு விழாவும் இடம் பெற்றது.
கலை நிகழ்வுகளின் போது சிறுவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில் பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றினர். இதன் போது சிறுவர்களுக்கு பரிசிலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE