டிக்கோயாவில் கார் விபத்து

14
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்) 
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
தியசிரிகம பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற கார் 15.10.2018 மாலை 5.30 மணியளவில்  பாதையை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியின் கட்டுப்பாட்டை மீறீ காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றுக்கரையில் வீழ்ந்துள்ளது. காரை செலுத்திய சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
SHARE