சாலைகளில் பணத்தினை வீசி எறியும் கோடீஸ்வரரின் மகன்

35

ரஷ்யாவில் கோடீஸ்வரர் ஒருவரின் மகன் சாலைகளில் பணத்தினை வீசி எறியும் வீடியோ வைரலாகியுள்ளது.

தனது முகத்தினை காட்டா விரும்பாத அந்த நபர், கருப்பு நிற மாஸ்க் அணிந்துகொண்டு செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் காரில் பயணித்துக்கொண்டே ஜன்னல் வழியாக. £570 பவுண்டினை வீசியுள்ளார்.

பணத்தை ஒவ்வொரு தாளாக வீசி செல்கிறார். அதை அங்கிருந்த சிலர் பணம் பறப்பதாகக் கூறி எடுத்துச் செல்கின்றனர். இதே நபர், மணலில் சிக்கிய தமது மெர்சிடஸ் எஸ் 500 கூப் ரக காரின் டயரில் பணத்தாள்களை போட்டு மீட்ட புகைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

570 பவுண்ட் என்பது ரஷ்யாவின் சராசரி மாத சம்பளம் ஆகும்.

 

SHARE