சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது

23

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பான்குளாவ ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வைத்து பெண்ணொருவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார்.  லதரன்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பான்குளாவ பிரதேசத்தில் வைத்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் இவ்வாறு 90 லீற்றர் நிறையுடைய 120 சட்டவிரோத மதுபான   போத்தல்களுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE