பெண் வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

13

வாகன விபத்தொன்றில் கைதுசெய்யப்பட்ட பெண் வைத்தியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் மற்றும் ஜீப் ரக வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்பில் காரைச் செலுத்திய வைத்தியரான பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண் வைத்தியரை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE