நீரில் மூழ்கி 17 வயது இளைஞர் பரிதாபமாக பலி

16

லுணுவில வடக்கு தம்மிகம பிரதேசத்தில் நேற்று  மாலை  ஜின்ஓயா ஆற்றில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து மீன் பிடிக்கச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த அயேஸ் பெர்னாண்டோ என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இளைஞர்கள் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இருந்த இடத்தில் மீன்கள் இல்லாதிருந்ததால் ஆற்றின் மறு கரைக்கு நீந்திச் சென்று கொண்டிருந்த போதே குறித்த  இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பொலிஸாரின்  ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு இவ்விளைஞர் நீரில் மூழ்கியதையடுத்து நண்பர்கள் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்போடு  கரை சேர்த்து உடனடியாக மாராவில வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE