விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த சிவகார்த்திகேயன்

38

சினிமாவில் நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் சும்மா விடுவது இல்லை. அவர்களுக்குள் வசூலில் கலக்கும் நடிகர் யார் என்ற பெரிய சண்டை நடக்கும்.

விஜய் சேதுபதி ஆரம்ப கட்டத்தில் கஷ்டப்பட்டாலும் இப்போது தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

இவரது 25வது படமாக சீதக்காதி படத்திற்காக பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ நடைபெறுகிறது. விஜய் சேதுபதி போட்டியாளர் என்று பார்க்காமல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கோபிநாத் எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல்.

SHARE