அதிர வைக்கும் பேஸ்புக் ஹேக்கிங்

57

சமூக வலைத்தளங்களை இலக்கு வைத்து பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதில் ஹேக்கர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இப் பிரச்சினையால் பேஸ்புக் வலைத்தளமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாரிய தகவல் திருட்டு தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது தாம் எண்ணியதை விடவும் அதிகமான பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 29 மில்லியனை விடவும் அதிகம் ஆகும்.

செல்பேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் உட்பட மேலும் பல தனிப்பட்ட தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளமையை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

SHARE