எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் உணவுப்பொருட்கள்

52

எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும்.

இத்தகைய எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும்.

பிரண்டை

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை. மேலும் இவை உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

காய்கறிகள்

கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது.

கீரைகள்

அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

எள்

இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகு

கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம்.

SHARE