இலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா?

28

இலங்கையில் அதிகளவு உணவு வீணடிக்கப்படும் ஒரே இடம் நாடாளுமன்றம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் நாட்டில் அதிகளவு உணவு நாடாளுமன்றத்திலேயே வீணடிக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும்.

நாடாளுமன்றத்தில் சமைக்கப்படும் உணவிற்கு ஏற்பவர் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தராமல் இருப்பார். இல்லை என்றால் சிலர் நாடாளுமன்ற உணவுகளை உண்பதில்லை.

இதன் காரணமாக பாரிய அளவிலான உணவுகள் வீணடிக்கப்படுகின்றது. கடந்த 28 வருடங்களாக தொடர்ந்து நான் நாடாளுமன்றத்தில் உள்ளமையினால் அந்த விடயங்கள் எனக்கு நன்றாக தெரியும்.

அத்துடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவில் மூன்றின் ஒரு பகுதியை மிருகங்கள் வீணடிக்கின்றது.

இலங்கையில் மாத்திரம் அல்ல உலகளவில் மிருகங்கள் இவ்வாறு உணவை வீணடிப்பதாக நியூயோர்க் மாநாட்டிற்கு சென்ற போது அறிந்து கொண்டேன்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE