இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெய்சூர்யா என்ன தவறு செய்தார்.

10

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி ஊழல் புகார் பதிவு செய்துள்ளது.

ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணை சார்ந்த முக்கிய ஆவணங்களை அழித்தது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிசி., வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயசூர்யா 14 நாட்களுக்குள் ஊழல் தடுப்புபிரிவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக வேறு எவ்வித விளக்கமும் தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது

இப்படி ஐசிசி ஜெயசூர்யாவின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்ப்போம்.

இலங்கை அணியின் ஜாம்பவான்களில் ஒருவராக இருந்தவர் தான் சனத் ஜெயசூர்யா. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின் 2015-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.

அப்போது இவர் இருந்த இரண்டு வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணி தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதாவது,2017-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3-2 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயிடம் இலங்கை தோல்வியடைந்தது.

இந்தத் தொடருக்கான இலங்கை அணியைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக ஐ.சி.சி-க்கு சந்தேகம் எழுந்தது. இலங்கை அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயசூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு பிரிவினர், ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்தனர். அதில், ஊழல் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு ஜெயசூர்யா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் ஜெயசூர்யா விளக்கம் அளிக்கவில்லை. இதனால் விள்ளமாக பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பர்சனல் ரீசன் என்பதைக் காரணமாக வைத்து, தன்னுடைய மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை ஜெயசூர்யா தர மறுத்துள்ளார்.

மொபைல் போன் குறித்த கேள்விக்கு, பொய்யான பதில் அளித்துள்ளதாகவும், சிம் கார்டை மறைத்து வைத்து, ஒரு மொபைல் போனை அழித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

1996-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையின் போது 214 ஓட்டங்கள், 6 விக்கெட்டுகள், 3 கேட்சுகள் என கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்ப்பி பார்க்க வைத்த இவர், தற்போது இது போன்ற ஊழ்ல் புகாரில் சிக்கியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.சி.சி-யின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெயசூர்யா, மேட்ச் பிக்சிங், பிட்ச் முறைகேடு செய்ததாக என் மீது புகார் இல்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றே என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுவரையிலான என் பணியில் முறைகேடுகள் எதுவும் செய்ததில்லை என்று கூறியுள்ளார்.

SHARE