சஜா கடற்கரை வெற்றிக்கிண்ணம்

98

அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சஜா கடற்கரை வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டனர்.

அணிக்கு 9 பேர் 8 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 22 முன்னணிக்கழகங்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரை மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை(13) ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் ஜே.அர்சாத் தலைமையில் நடைபெற்றது.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக்கழகமும் அக்கரைப்பற்று டீன்ஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.

நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 7.3 ஓவர் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு வெற்றிபெறத் துடுப்பெடுத்தாடிய டீன்ஸ் ஸ்டார் அணியினர் 6.4 ஓவர் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 20 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 29 ஓட்டங்களால் இச்சுற்றுப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாமிடத்தினை தனதாக்கிக் கொண்டனர்.

நியு ஸ்டார் கழகத்தலைவர் ஏ.எச்.றிசாட் 120 ஓட்டங்களையும் 9 விக்கட்களையும் வீழ்த்தி இச்சுற்றுப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இதே கழகத்தச் சேர்ந்த ஆர்.றிஸ்கான் இறுதிப்போட்டியில் சிறந்த வீரராகவும் மற்றும் சிறந்த களத்தடுப்பாளராக ஐ.சக்கியும் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளினால் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடம்பெற்ற டீன்ஸ் விளையாட்டுக் கழகத்தலைவரிடம் கிண்ணத்துடன் 15 ஆயிரம் ரூபா பண வவுச்சரினையும் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.றபாயுதீன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொதுச் சுகாதாரப்பரிசோதகர் கே.றிஸ்வான் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகர் ஏ.எம்.அப்துல்கரீம் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

முன்னணிக்கழகமான அட்டா ளைச்சேனை நியு ஸ்டார் சில காலத்திற்குப்பின்னர் மீண்டும் சுற்றுப்போட்டியில் ஒன்றில் சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.

முகாமையாளர் எப்.நஜ்ஹரின் வழிநடத்தல் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE