மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் அலன் மரணம்

70

மைக்ரோசொப்ட் இணை நிறுவனரான போல் அலன், லிம்போமா எனும் ரத்தப் புற்றுநோயால் தனது 65 வயதில் காலமானார்.

கடந்த 1975 ஆம் ஆண்டில், பில்கேட்ஸ் மற்றும் போல் அலன் இருவரும் இணைந்து ஆரம்பித்த மைக்ரோசொப்ட், கணனி மூலமாக புதிய புரட்சியை செய்து பெரும் பாணக்காரர்கள் ஆகினர். உலகளவில் 46ஆவது பெரிய செல்வந்தராக அறியப்படும் போல் அலன் மற்றும் கேட்ஸுக்கு இடையிலான நட்பின் விரிசலால் 8 ஆண்டுகள் கழித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். 2009-ஆம் ஆண்டு புற்றுநோயுடன் போராடி வென்ற அலனுக்கு மீண்டும் புற்றுநோய் வந்துள்ளதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அலன் திங்கட்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி சியாட்டில் உயிரிழந்தார்.

SHARE