அமெரிக்க கொள்கையை பின்பற்ற ஆஸி. திட்டம்

25

ஜெரூசலம் விவகாரம்:

அவுஸ்திரேலியா அதன் இஸ்ரேலியத் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதி ஏற்படுத்துவதற்கு தடைக்கல்லாக இருப்பவற்றுள் ஜெரூசலம் தீர்க்கமானதாகும்.

கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அமெரிக்கக் கொள்கையை மாற்றினார்.

அப்போது அந்தக் கொள்கையைப் பின்பற்ற அவுஸ்திரேலியா மறுத்தது.

யூதர்களை அதிகமாகக் கொண்டுள்ள சிட்னி தொகுதியில் முக்கிய பாராளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற சில நாட்கள் இருக்கும் வேளையில் அந்தத் திடீர் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மொரிசனின் முற்போக்குக் கட்சியின் வேட்பாளரான இஸ்ரேலுக்கான முன்னாள் தூதர், கருத்துக் கணிப்பில் பின்தங்கியுள்ளார்.

இடைத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தால், பாராளுமன்றத்தில் ஒருவரைக் கூடுதலாகப் பெற்றிருக்கும் முற்போக்குக் கட்சி, அதன் பெரும்பான்மையை இழக்கக்கூடும்.

SHARE