அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகும் Nokia X7

71

நோக்கியா நிறுவனத்தின் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் மற்றுமொறு புத்தம் புதிய ஸ்மார்ட் கைபேசியினை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் காத்திருக்கின்றது.

இதன்படி Nokia X7 எனும் குறித்த கைபேசியானது முதன் முறையாக சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைபேசியானது 6.18 அங்குல அளவுடையதும், 2246 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 710 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 12 மெகாபிக்சல்கள் மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் குறித்த கைபேசியானது கூகுளின் Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE