ஹெய்டியில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் !

32

ஹெய்டியில் அரசாங்த்திற்கு எதிராக மக்கள் திரண்டு மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எண்ணெய் உற்பத்தித் திட்டத்திற்காக வெனிசுவேலா நாடு ஹெய்டி அராங்கத்திற்கு வழங்கிய நிதியை அந்நாட்டு நிர்வாக உறுப்பினர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்த்து, நேற்று (புதன்கிழமை) ஹெய்டி மக்கள் தலைநகர் போட்டவ் பிரின்ஸில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் களைக்கும் முகமாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினரின் தலையீடு காரணமாக ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் மீது எதிர்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இருதரப்புத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த உயிரிழந்த ஆர்ப்பாட்டக்காரரின் அடையாளங்கள் பொலிஸ் பிரிவினரால் உறுதியாக அறிவிக்கப்படாத போதிலும், அவர் தலைநகரில் கூலிக்கு வாகனத்தைச் செலுத்தும் சாரதியென ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள ஹெய்டி ஜனாதிபதி ஜொவனெல் மொய்ஸ் பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE