சிறைத்துறை மீது கண்டனம்

22

இங்கிலாந்து சிறைச்சாலைகளில் இருந்து கடந்த மூன்று வாரங்களில் நான்கு சிறைக்கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதிமுதல் 28ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் HMP Norwich, HMP Onley, HMP Styal மற்றும் HMP Isis ஆகிய சிறைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் இவர்கள் அனைவரும் மீள கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதியமைச்சின் பேச்சாளர், அவர்கள் எவ்வளவு காலம் வெளியில் இருந்தனர் என்ற விடயத்தைக் குறிப்பிடவில்லை. அத்தோடு, இவ்வாறான சம்பவங்கள் அரிதாகவே நடக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் பிரகாரம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாரமொன்றிற்கு ஒருவர் இவ்வாறு தவறுதலாக விடுதலை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, சிறைத்துறை கட்டமைப்பை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாரிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை இவ்வாறு தவறுதலாக விடுதலை செய்யும் பட்சத்தில், அவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

SHARE