இளையோர் ஒலிம்பிக்கில் ஷெலிண்டாவுக்கு 9ஆவது இடம்

28
ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயேர்ஸில் நடைபெற்றுவரும் 3வது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நேற்றுமுன்தினம் (16) நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் இரண்டாம் நிலை ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர இளம் குறுந்துர ஓட்ட வீராங்கனையான ஷெலிண்டா ஜென்சன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

போட்டியை 24.07 செக்கன்களில் நிறைவுசெய்தஅவர், 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை சார்பாக கனிஷ்ட வீரங்கனையொருவரால் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டப்பட்ட 3ஆவது அதி சிறந்தகாலப் பெறுமதியாகவும் இது பதிவாகிய குறித்தபோட்டிப் பிரிவில் ஷெலிண்டாவின் அதிசிறந்தநேரப் பெறுமதியாகவும் இது பதிவாகியமைமற்றுமொருசிறப்பம்சமாகும். முன்னதாக 1994ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்டவீராங்கனையும்,ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க, 23.18 செக்கன்களிலும், 200 மீற்றரில் ஆசிய சம்பியனும், முன்னாள் வீராங்கனையுமான தமயந்திதர்ஷா 23.21 செக்கன்களிலும் போட்டியை நிறைவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் முதல் நிலைப் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிருந்த ஷெலிண்டா,போட்டியை 25.00 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடுமையான குளிருக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியின் 5ஆவது சுவட்டில் ஓடிய ஷெலிண்டா,போட்டியின் முதல் வளைவில் முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து வேகமாக ஓடிய அவர், இறுதி 100 மீற்றர் வரை முன்னிலை பெற்று போட்டியை 24.07 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றார். இதற்கு முன் 24.98 செக்கன்களில் ஓடி முடித்து தனது சிறந்த காலத்தைப் பதிவுசெய்த அவர், 0.92 செக்கன்களில் அதை மீண்டும் புதுப்பித்தமை மற்று மொருசிறப்பம்சமாகும். போட்டியின் முதல் நிலையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஸ்பெய்ன் மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளை ஷெலிண்டா ஜென்சன் வீழ்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 22 வீராங்கனைகள் பங்குபற்றிய குறித்தபோட்டிப் பிரிவில் ஷெலிண்டா ஜென்சன் 9ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்தசெனிரு அமரசிங்க, 4ஆவது இடத்தையும்,ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்தடிலான் போகொட,7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

206 நாடுகள் பங்குபற்றியுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தினை வென்ற இலங்கை அணி 78ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

SHARE