அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்

33
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட அழகு ராணிகளின் மரதன் ஓட்டம் கடந்த 13 மட்டக்களப்பில் நடைபெற்றது.

பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் முந்நூறுபேர் இந்த மரதன் ஓட்டத்தில் பங்கேற்றனர்

வந்தாறுமூலை உப்போடை பிரதேசத்திலிருந்து ஆரம்பமான இந்த மரதன் ஓட்டம் ஏ-15 மட்டக்களப்பு- திருமலை வீதியினால் சென்று ஏ-5 செங்கலடி- பதுளை வீதி வழியாக 16 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் நிறைவடைந்தது

ரெயிட் அமேஸன்ஸ்-2018 என்ற திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

நாளை 19 ஆம் திகதி வரை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக பாசிக்குடாவிற்கு சுற்றுலாப்பயணிகளது வரவினை அதிகரிக்கும் நோக்குடன் கவர்ச்சிகரமான இத்திட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

SHARE